ஏப்ரல் 11ம் தேதி தலைமை செயலக முற்றுகை போராட்டம் – ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு..!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம்.

தமிழ்நாட்டில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னை தலைமை செய்யகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் வரும் 7,8,9 ஆகிய தேதிகளில் தமிழக எம்பிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.