தமிழகத்தில் விழாக்காலம் , தொடர் விடுமுறை நாட்கள் வந்தால் போதும் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வானது அதிரடியாக உயருகிறது.இந்த வாய்ப்பை ஆம்னி பேருந்துகளின் நிர்வாகத்தினர் பயன்படுத்தி கொண்டு அதிரடியாக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையானது வருகிற 24ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள்.
அதனால் தற்போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல குறைந்த பட்சமாக 1899ல் இருந்து அதிகபட்சமாக 2,938 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,699 முதல் ரூ.2,150 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் மற்ற பகுதிகளுக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்ல அதிகபட்சமாக ரூ.3.950 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.