தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சிபக்கம் உள்ள பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி லோகநாயகி ( வயது 72) இவர் ஆஸ்துமா மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். குணமடையவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லோகநாயகி நேற்று அவரது வீட்டில் வைத்து உடலில்மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதில் உடல் முழுவதும் கருகிஅதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மகன் பிரகாஷ் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.