மொபட் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி..

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் இடையர்பாளையம் , பட்டேல் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி ( வயது 60) இவர் நேற்று வெள்ளலூர் பிரிவு எல்..அன்டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவரது மொபட் மீது மோதியது. இதில் கிருஷ்ணசாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த சூலூர் இடையர்பாளையத்தை சேர்ந்த சுந்தரம் மகன் சந்தோஷ் ( 26 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் விசாரணை நடந்து வருகிறது.