திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தளி பக்கம் உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கருப்பாத்தாள் (70) இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இந்த நிலையில் நேற்று சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள பி. ஏ. பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் சங்கர் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில்செய்தார்.
இதே போல சுல்தான்பேட்டை பக்கம் உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. ( 72 )விவசாயி .இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து நேற்று சுல்தான் பேட்டையில் உள்ள பிஏபி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் மாலதி சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..