மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்ஷா புதூர், கணபதி பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பானுமதி ( வயது 75)இவருக்கு முதுமையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது இதனால் மனமுடைந்த பானுமதி சாணி பவுடரை கரைத்துக் குடித்தார்.அவரை சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்தார் இது குறித்து அவரது மகன் முத்து ராம்குமார் ஆனைமலை போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.