கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த செவ்வாய்கிழமை பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள சோலையாறு இடது கரை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பாட்டி மற்றும் பேத்தி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இச்சபவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ முரளீதரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் புதன் கிழமை அன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட சோலையாறு அணை இடதுகரை பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக ஏராளமான காட்டேஜ்கள் கட்டப்பட்டு செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தவிற்கிணங்க நகராட்சி ஆணையாளர் விநாயகம், வட்டாட்சியர் சிவக்குமார்,காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த டோமி என்பவருக்கு சொந்தமான ஒரு காட்டேஜ் மற்றும் சரவணன் என்பவருக்கு சொந்தமான இரண்டு காட்டேஜ் கள் மொத்தம் மூன்று காட்டேஜ்களை அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து காட்டேஜ்களையும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாராபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0