கோவையில் நர்ஸ் திடீர் மாயம்.!!

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு, பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவரது மகள் ரேபேக்கா அஞ்சலி (வயது 28) கோவையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 24ஆம் தேதி தனது தோழியுடன் ஆட்டோவில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.