பிரபல டூவீலர் கொள்ளையன் கைது.12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் .

கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சூலூர் காவல் நிலையத்திற்குபுகார்கள் வந்தது. இதன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவுபிறப்பித்தார். இதன் பேரில், சூலூர் காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரியை தேடி வந்தனர் இந்த நிலையில் சூலூர் கே.எம்.சி எச் மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு மகன் கவுதம்(வயது 34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர் , அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. இதில் பல இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளியிடமிருந்து சூலூர், கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், பீளமேடு, திண்டுக்கல், சத்தியமங்கலம், காட்டூர் என பல்வேறு பகுதிகளில் திருட்டு போன 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.