கோவையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களில் நோட்டீஸ்

கோவையில் பல இடங்களில்ரோடு ஓரத்தில் கேட்பாரற்று ஏராளமான கார்கள் கிடப் பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகி றது. அந்த கார்களில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள். காரின் உரிமை யாளர்கள் உடனடியாக அந்த கார்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறைஅறிவிப்பு விடுத்துள்ளது. தவறும் பட்சத்தில் அந்த கார்கள்காவல்துறையின் சார்பில் அப்புறப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.