பேனாவை மட்டுமல்ல.. கேட்பவர்கள் மண்டையையும் சேர்த்து உடைப்பேன்.. சீமான் ஆக்ரோஷ பேச்சு..!

ரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “பேனா சிலையை உடைப்பாயா என்கிறார்கள்? ஆம் உடைப்பேன். இதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டால் கேட்பவர்கள் மண்டையை உடைப்பேன் என்று சீமான் கூறியுள்ளார். நீங்கள் அதிகாரத் திமிரில் பேனா வைத்தால், அதிகாரம் எனக்கும் வரும். அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது என ஆவேசமாக பேசினார்.