கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில வாலிபர் கைது.

கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட் களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சாமற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர்அங்குள்ள சென்னியாண்டவர் கோவில் அருகே நேற்றுதிடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து கொண்டிருந்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாவல் பாஷ்வான் மகன் ராகேஷ் பாஸ்வான் ( வயது27) என்பவரை கைது செய்தனர். அவரிட மிருந்து சுமார் 1 ¼ கிலோ கஞ்சா மற்றும் 300 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..