கோயம்புத்தூரில் 1 கிலோ கஞ்சா ரூ 8 ஆயிரம் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் வானத்தில் மிதக்கும் சூப்பர் கஞ்சாவை கடத்திய கேடி கைது தமிழக ரயில்வே போலீஸ் அதிரடி நாயகி ஏடிஜிபி வனிதா ஒரு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓடும் ரயில்களிலும் க ஞ்சாவோ போதை மாத்திரைகளோ போதை ஊசி களோ நடமாட்டம் இருப்பதையும் கடத்திச் செல்வதையும் இருப்பதை அடியோடு தடை செய்யப்பட வேண்டும். அப்படி மீறி நடந்தால் என்னுடைய நடவடிக்கை மிகவும் மோசமாக இருக்கும். இந்த உத்தரவை அடுத்து தமிழக ரயில்வே போலீஸ் டி ஐ ஜி அபிஷேக் தீக்ஷித் சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் அன்பு ஆகியோரது நேரடி மேற்பார்வையில் ஜோலார்பேட்டை ரயில் நிலைய 1 வது பிளாட்பார்மில் அடீ யாவில் இருந்து எஸ்வந்தபூ ர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக வந்து நின்றது.வண்டியின் பின்னாடி மூன்றாவது பொது ஜன பெட்டியில் இறங்கிய நபர் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி கோயம்புத்தூருக்கு செல்ல இருந்ததாகவும் அவரை மடக்கிய ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமை காவலர் பாபு மற்றும் காவலர் கார்த்திக் இந்தி மொழியில் பேசிய சந்தேகப்படும்படியான நபர் குற்றவாளி ஹீ ரா லால் நியால் வயது 28. தகப்பனார் பெயர் ஹேமராஜ் நீயால் பேஹாரா கல்ஹாண்டி ஒடிசா மாநிலம். உன்னிடத்தில் இருந்து கஞ்ஜாவை அருந்தினால் வானத்தில் பறக்கும் உற்சாகம் பிறக்கும் எனக் கூறியுள்ளான். அவனிடத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இந்த கஞ்சாவை ஒடிசாவில் ஜூனே கர்ட் என்ற இடத்தில் ஒரு கிலோ கஞ்சா 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கோயம் புத்தூரில் ஒரு கிலோவிற்கு 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்க கலாம் என்ற ஆசையில் தமிழக ரயில்வே போலீஸிடம் வசமாக சிக்கிக் கொண்டேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதி லாபத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சினான். போலீசார் எதற்கும் மயங்காமல் குற்றவாளியை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0