கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புனித் பிரசாந்த் ( வயது 65)இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு சிறையில் வைத்து நேற்று திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0