கோவை அருகே மனைவியை கொலை செய்த வட மாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

ஓடி சா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் நாயக் ( வயது 33) இவரது மனைவி ரூனு நாயக் (வயது 30) இவர்கள் கோவைசூலூர் அருகே உள்ள கள்ளபாளையத்தில் தங்கியிருந்துஅங்குள்ள தேங்காய் தொட்டி மூலம் கறி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சுதர்சனநாயக்கின் நண்பருடன் தனது மனைவி ரூனு நாயக் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். இதனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி ரூனு நாயக் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இது குறித்து சுதர்சன் நாயக் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுதர்சன் நாயக் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது மனைவி ரூனுநாயக்கை ஓங்கி அடித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார் .இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதர்சன் நாய்க் கை கைது செய்தனர். இது தொடர்பாக கோவையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்தது இதைதொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை யடுத்து குற்றம் சாட்டப்பட்ட சுதர்சன் நாயக்கிற்குஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பு கூறினார். இதைய டுத்து போலீசார் சுதர்ச நாய்க் கை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்இந்த வழக்கில் சிறந்த முறையில் விசாரணை மேற்கொண்ட விசாரணை அதிகாரி, மற்றும் சாட்சிகளை சிறந்த முறையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் ஆகியோரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்..