மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு..

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்தன் மஞ்ஜி (வயது 26) இவர் தேவராயபுரம் பக்கம் உள்ள கொண்டையம்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் ராஜா என்பவர் வெள்ளருக்கம் பாளையத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் இரும்பு தகர கொட்டகை அமைக்கும் பணியில் சாந்தன் மஞ்ஜி, ராம் பாரதி உட்பட 4 பேர் ஈடுபட்டனர் .அவர்கள் தகரக் கொட்டகை மேல் அமர்ந்து வெல்டிங் செய்யும் போது திடீரென்று மின்சாரம் தாக்கியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் சாந்தன் மஞ்ஜி அதே இடத்தில் இறந்தார். மற்றவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..