காதலியை பற்றி அவதூறாக பேசிய வட மாநில தொழிலாளி அடித்துக் கொலை . 3 பேர் கைது.

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள அரசம்பாளையத்தில் சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள் அதில் பூபேந்திரா ( வயது 21) என்பவர் நேற்று முன்தினம் இரவில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார் .இது குறித்து கிணத்துக்கடவு போலீசுக்குதகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் பூவேந்திரரவுடன் வேலை செய்து வந்த சாருக் (வயது 20) மற்றும் 17 வயது நிரம்பிய 2 சிறுவர்கள்சேர்ந்துஅவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் அங்குள்ள ஒரு தோட்டத்தில் பதுங்கி இருந்த சாரூப் மற்றும் 2 சிறுவர்களை போலீசார்மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறிய தாவது:- பிடிபட்டவர்களில் 17 வயது சிறுவருக்கு அவரது ஊரில் காதலி இருக்கிறார். அவர் தனது காதலியிடம் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். அவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அவர் தனது காதலியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பூபேந்திரா அவரது காதலி குறித்து அவதூறாக பேசினார். N இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது உடனே அவர்களை சக தொழிலாளர்கள் சமாதானப்படுத்தினர். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் உருவானது .இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுவனுக்கு பிறந்தநாள். இதை அவர் கேக் வெட்டி தனது நண்பர்களுடன் மது குடித்து பிறந்த நாளை கொண்டாடினார் அதில் பூவேந் திராவும் உள்ளார். போதை தலைக்கேறியதும் அந்த சிறுவனின் காதலி குறித்து மீண்டும் பூ பேந்திரா அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தன்னுடன் வேலை பார்க்கும் சாருக் மற்றும் ஒரு சிறுவருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் பூபேந்திராவை அடித்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினார்கள் ,இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டது இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.