வேட்பு மனுதாக்கல் இன்று துவங்குகிறது: வேட்பாளருடன் 4 பேர்களுக்கு மட்டுமே அனுமதி..!

ரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அ.தி.மு.க. இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (31-ந்தேதி) தொடங்கி வருகிற 7-ம் தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம்.. வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாது.8-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

வேட்பு மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையபப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.