புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு

பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் சிஎஸ்,டபுல்யு, பவுண்டேசன், சம்யுக்தா கிரியேஷன்ஸ் இணைந்து புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிராந்திகுமார் பாடி அவர்கள் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்,சர்மிளா, மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் நாகராஜன்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர், சரண்யாதேவி சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் எம், தௌபிக், சி,எஸ்,டபுல்யு, பாசில் ரகுமான், சம்யுக்தா கிரியேஷன்ஸ் சம்யுக்தா கிருஷ்ணா கலை கல்லூரி கங்கா செவிலியர் கல்லூரி டெக் சிட்டி செவிலியர் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பேரணி பந்தய சாலையில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நிறைவுற்றது கலந்து கொண்டனர்.