என் மகள் பெயரை நாட்டில் யாரும் வைக்கக் கூடாது.. மீறி வைத்தால் மரணம்… அடாவடி அதிபர் கிம் ஜாங் உன் போட்ட உத்தரவு..!

ங்களின் குடும்ப பெயர்களை நாட்டு மக்கள் வேறு யாரும் வைக்க கூடாது. அதிலும் குறிப்பாக தன் மகளின் பெயரை வேறு யாரும் வைக்கவே கூடாது .

அப்படி வைத்திருந்தால் ஒரு வாரத்திற்குள் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மரணம் கூட நிகழும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் அடாவடி அதிபர் கிம் ஜாங் உன்.

வடகொரியாவில் தான் இப்படி ஒரு கொடுமை நடக்கிறது. வடகொரியா நாட்டில் மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த அரசின் தணிக்கைக்கு பிறகு தான் அந்நாட்டில் செய்திகள் வெளியாகின்றன. நாட்டு மக்கள் சுதந்திரமாக சமூக வலைத்தளங்களை கூட பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது .

இந்த நிலையில் வடகொரியாவின் அதிபர் கிங் ஜாங் உன் தங்களின் குடும்ப பயர்களை அந்நாட்டு மக்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறக்கத்திருக்கிறார். தன் மகளின் ‘ஜூஏ’ பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தனது மகளை பொதுவெளியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். தற்போது தன் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள் ஒரு வாரத்திற்கு பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால் வடகொரிய மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். வடகொரியா மக்களின் தொகை 2.6 ஆகும். இதில் கிம் பெயர் கொண்டவர்கள் சுமார் ஒரு கோடி பேர் என்று என்பது தெரிய வருகிறது. இத்தனை பேரும் தங்கள் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றால்.. அடாவடி அதிபரால் பெரும் சிக்கலில் இருக்கிறார்கள் வடகொரிய மக்கள்.