இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தினம் தோறும் புதுவிதமான மோசடிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதனால் அரசு மக்களுக்கு தொடர்ந்து பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. தமிழக காவல்துறையினர் அடிக்கடி சமூக விழிப்புணர்வு சார்ந்த எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது வங்கி விவரங்கள், ஆதார் விவரங்கள், உங்கள் தனிப்பட்ட முகவரி, மொபைல் போன் ஓடிபி போன்ற பலவற்றை வைத்து மோசடி வேலைகள் நடைபெறுகிறது. அதன்படி தற்போது புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது telegram மற்றும் whatsapp மூலம் வரும் எந்த தேவையற்ற லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்று கூறி உங்கள் whatsapp குரூப்பில் வரும் telegram லிங்கில் இருவது டாஸ்க்கள் முடித்தால் பணம் என்றும் உங்களை நம்ப வைத்து அதனை முடித்த பிறகு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். இதனால் இது போன்ற மோசடி சம்பவங்களை கருத்தில் கொண்டு தேவையற்ற லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.