நீலகிரி மாவட்டம் உதகையில் பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி பாராளுமன்ற தொகுதி மகளிர் அணி மாநாடு மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பல பகுதியில் இருந்து திரளான பெண்கள் கூட்டம் மகளிர் அணி கலந்து கொண்டனர், இந்த மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளதாகவும், ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிகளிலும் பெண்கள் உத்வேகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார், மேலும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதற்கு பத்திரிகையாளரே தாக்கப்பட்ட விவகாரமே மிக சிறந்த உதாரணம் என்றார், சென்ற தேர்தலில் நின்ற மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இதுநாள் வரை தொகுதி பக்கமே தலை காட்டவில்லை சினிமா, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றியடைந்துள்ளார் என்றார்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மக்களுக்கு கொண்டு செல்வதில்லை மத்திய அரசு ஒதுக்கும் நிதியினை தமிழக அரசு மறைத்து வருவதாக குற்றம் சாட்டினார், மத்திய அரசின் திட்டங்களுக்காக வைக்கப்படும் விளம்பர பலகைகளில் பாரத பிரதமர் மோடியின் படங்கள் இடம் பெறாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். இதை குறித்து முறையிட்டபோது அதற்குப் பிறகு மோடியின் படத்தை ஒவ்வொரு விளம்பர பலகைகளிலும் தனியாக கொண்டு ஒட்டுவதை பார்க்கும் பொழுது ஸ்டிக்கர் கலாச்சாரம் தெரிகிறது என்றார், மற்றும் அரசியலுக்கு நடிகர் விஜய் வருவதை நாங்கள் வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் என்றார். மேலும் பேசிய அவர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பதிவிட்டு வருவதால் அவருடைய பெயரை ஆ.ராசா என்பதற்கு பதிலாக துஷ்பிரயோக ராசா என்று வைத்துக் கொள்ளலாம் என்றார். செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அரியானா எம்பி சுனிதா துக்கல் ,மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0