நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரம் பழத்தோட்ட பகுதியினை சார்ந்தவர் விவசாயி சின்னப்பன் அவர்கள் தோட்டத்தில் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணையின் இதர உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரம் பழத்தோட்ட பகுதியினை சார்ந்தவர் விவசாயி சின்னப்பன் கடந்த 5-ஆண்டுகளுக்கு மேலாக ஆல்டன் இயற்கை விவசாய பண்ணை என்ற பெயரில் அங்கக வேளாண்மை செய்து வருகிறார். தோட்டக்கலைத்துறையினரின் வழிகாட்டுதலின் படி தோட்டக்கலைப் பயிர்க ளோடு, பழபயிர்கள், ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, நாட்டுகோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, அசோலா சாகுபடி, தீவன பயிர்கள், மூலிகை பயிர்கள், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணை யமாக செய்து வருகிறார். மேலும் தனது தோட்டத்தில் இயற்கை சார்ந்த உரங்கள், பூச்சிவிரட்டிகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தி வருகிறார்,மேலும், தோட்டக்கலைத்துறையின் மூலமாக மானியத்தில் பண்ணைக்குட்டை, பழநாற்றுக்கள், தேனீபெட்டி, மண்புழு உரப்படுக்கை, நடமாடும் காய்கறி விற்பனை வண்டி, தெளிப்பான் பேன்றவைகள் பெற்றுள்ளார். மேலும், அட்மா திட்டத்தின்
செயல் விளக்கத்தின் மூலமாக அசோலா சாகுபடி, சூரிய சக்தியால் இயங்கும் விளக்குபொறி, ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுபாடு தொகுப்பு மற்றும் வனவிலங்கு விரட்டி தொகுப்பு போன்றவை பெற்று பயன்படுத்தி வருகிறார். மேலும், அட்மா திட்டத்தின் மூலம் சிறந்த விவசாயிக்கான மாவட்ட அளவிலான விருதினை பெற்றுள்ளார். மேலும், சிம்பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் சிறந்த பழப்பயிர் சாகுபடியாளர் என்ற விருதினையும் பெற்றுள்ளார், தனது பணி ஓய்வு காலத்திலும் ஓய்வாக இல்லாமல் மற்ற விவசாயிகளுக்கு உதாரணமாகவும், முன்னோடி விவசாயியாகவும் உள்ளார், என்பது பாராட்டக்கூடியதாக உள்ளது,தோட்டக்கலைத்துறையின் மூலமாக இவரது பண்ணையில் மற்ற விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த பயிற்சிகள், கண்டுணர்வு
சுற்றுலாக்கள், செயல் விளக்கங்கள், பண்ணைப்பள்ளி நடத்தப்படுகின்றன. மேலும், துறையின் சார்பாக கிராம அளவில் நடைபெறும் பயிற்சிகளுக்கு பயிற்றுநராகவும் உள்ளார். மேலும், இவர் தோட்டக்கலைத்துறையின் மூலமாக பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெறும் அங்கக வேளாண்மை வாரச்சந்தையில் இலாபகரமாக விற்பனை செய்து வருகிறார். மேற்காணும், செயல்பாடுகளை குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இவரது தோட்டத்தில் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணையின் இதர உற்பத்தி பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தோட்டக் கலைத்துறை இணை இயக்குனர் ஷபிலாமேரி, துணை இயக்குநர் அப்ரொஸ்பேகம், உதவி
இயக்குனர் சிம்ஸ் பூங்கா செல்வி.விஜயலட்சுமி, தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் ஆய்வின்போது கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0