நீலகிரி மாவட்ட உதகை லோயர் பஜார் பகுதியில் கழிவுநீர் சாலையில் தேங்கியதால் சுகாதாரம் பாதிப்பு?

உதகை: நீலகிரி மாவட்ட லோயர் பஜார் மத்திய பேருந்து செல்லும் சாலை மற்றும் பெரிய பள்ளிவாசல் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் உடைபட்டு சாலையில் வெட்ட வெளிச்சமாக செல்கிறது அப்பகுதியில் கோவில்கள், தொழுகை பள்ளிவாசல், மற்றும் உணவு விடுதிகள் உள்ளன, இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு பாதிப்பு அப்பகுதி மக்களையும் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பொதுமக்களையும் பாதிக்கின்றன, தற்போது நீலகிரி மாவட்டத்தில் பாதாள சாக்கடைகள் அடைபடுவது தொடர்பாக உள்ளது, இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் இடமாக உள்ளதால், நீலகிரி உதகை சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு,
உதகையில் இதுபோன்ற கழிவுநீர் தேங்கி நிற்பதால் தூய்மை உதகை கேள்விக்குறியாக உள்ளது,
உதகை நகராட்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னால்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்