நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் செல்லும் சாலை அருகே இயங்கி வரும் தக்க்ஷன் பாரத் இந்தி பிரச்சார சபா நடத்தும் ராஜஜி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா பள்ளி முதல்வர் ஜெய்குமாரி பால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, முன்னிலை நந்தா கோதம் கோத்தாரி, வரவேற்புரை மகேஸ்வரி ஆல்வின அனைவரையும் வரவேற்று பேசினார்,
விழா சிறப்பு விருந்தினராக, லேம்ஸ் ஆட்டோமேஷன் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விஞ்ஞானி ஆனந்த அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி ஆண்டு விழாவை துவங்கி வைத்தார், விழா நிகழ்ச்சியாக ஆண்டின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தங்களுடைய திறமையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி காட்டினர் சிறப்பு விருந்தினர்கள் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களித்து பாராட்டி வாழ்த்தினர், அதனைத் தொடர்ந்து விழா அரங்கில் நந்தா கோதம் கோத்தாரி ஜெயின் மகிளா மன்றல் நிர்வாகி அவர்கள் விழா விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவ வைத்தனர், விழா துவக்கமாக பள்ளியின் முதல்வர் ஜெயக்குமாரி பால் பள்ளியின் ஆண்டு அறிக்கையினை அறிவித்து கூறியதாவது பள்ளி வளர்ச்சிக்காக கணினி ஆய்வகம்,அறிவியல் ஆய்வகம், இந்தி படிப்பினை பிள்ளைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது, ஸ்மார்ட் வகுப்பு,மற்றும் பள்ளியை சுற்றிலும் கட்டமைப்பு சுவர்கள்
என பல புதுப்பிக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டது, இந்தப் பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்து வத்தை ஒவ்வொரு ஆண்டிலும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம் என்று ஆண்டு அறிக்கையில் வெளியிட்டார், தொடர்ந்து விழா சிறப்பு விருந்தினராக வருகை தந்த லேம்ஸ் ஆட்டோமேஷன் ஆராய்ச்சி நிர்வாகத்தின் இயக்குனர் விஞ்ஞானி ஆனந்த் அவர்கள் சிறப்புரையில் இன்று மாணவ மாணவிகளுக்கு கல்வி முக்கியம் அவசியத்தை விலக்கி நமது எதிர்காலம் கல்வியை சார்ந்து உள்ளது என்றார், பள்ளி மாண மாணவிகள் உங்களது வெற்றிக்கும் எதிர்கால வாழ்விற்கும் முக்கியமானது பெற்றோர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார், மற்றும் உங்களுக்கு கிடைத்த பள்ளி முதல்வர் சிறந்த முறையில் அர்ப்பணிப்பிலும் இந்தப் பள்ளியை நடத்தி வருகின்றார் என்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார், விழாவில் கலந்துகொண்ட அமுதவல்லி முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் மகிளா மன்றல் உறுப்பினர்கள், பத்திரிகையாளர் கிறிஸ்டி, விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், விழா ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள்
உமா, வீணா, ஜெயந்தி,குமாரி மஞ்சுளா, ஜெனெட் ஆல்வின, சிசிலி, ஸ்டெல்லா ஃபெலிக்ஸ், மகேஸ்வரி, ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தினர்,
தொடர்ந்து விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது, பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகளை கண்டு களித்து பாராட்டினர், விழா நிறைவாக விளையாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்க லேம்ஸ் ஆட்டோமெஷின் விஞ்ஞானி ஆனந்த், மற்றும் பள்ளி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினர், நடைபெற்ற பள்ளியின் ஆண்டு விழா அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் ஜெயகுமாரி பால் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன, நன்றியுரை மஞ்சுளா உமா ஆகியோர் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் நன்றி கூறி விழா நிறைவடைந்தது
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0