நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் வலது பக்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதி, சுற்றுலாத்துறை அலுவலகம், தனியார் பள்ளி, அரசியல் சார்ந்த கட்சி அலுவலகம் போன்ற முக்கிய சாலையாக இருந்தும், பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் தற்போது காட்டுச் செடிகளால் மூடப்பட்டு பகல் நேரங்களில் குளிர்ச்சி அடைந்து இரவு நேரங்களில் வெளிச்சம் தர முடியாமல் செடிகளுக்குள் சிக்கி மறைந்து ஒலி தரும் புதிய மாடல் விளக்குகளா என்பது மக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது, இப்பகுதிகளில் இரவு நேரங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனை நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா என்பது மக்களிடையே நம்பிக்கை இல்லை, இந்த காட்டுச் செடிகளை அகற்ற விட்டால் தொடர்ந்து அனைத்து விளக்குகளும் காட்டுச் செடிகளால் மூடப்பட்டு ஒளி தராமல் அந்தப் பகுதி இருளாகிவிடும், தற்போது நீலகிரி மாவட்ட உதகை பல பகுதிகளில் காட்டுச் செடிகளை அகற்றப்படாமல் அப்படியே விட்டு வைப்பதால் உதகை சுற்றுலா தளத்திற்கு ஒவ்வொரு நாளும் தூய்மையின் தகுதி இழந்து வருகிறது, பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர், மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலைகள் நடைபாதை கள் தற்போது முழு கவனம் செலுத்த நகராட்சி மற்றும் நீலகிரி நிர்வாகம் பணிகள் தொய்வு ஏற்படுவதால் மக்கள் சளிப்படைந்து உள்ளனர், எந்த ஒரு பணியும் முழு நிறைவு அடைவதில்லை, பல லட்சம் மதிப்பில் போடப்பட்ட தெருவிளக்குகள் தற்போது மாயமாகி வருகிறது, இதனை நகராட்சி கவனம் செலுத்தினால் இவ்வளவு நாட்களில் அந்தக் காட்டுச் செடிகள் விளக்கை மறைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்காது, தெரு விளக்குகளை மூடும் அளவிற்கு காட்டுச் செடிகள் வளர்ந்துள்ளதை நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகம், கண்டுகொள்ளாமல் இருந்ததால் இதுபோன்ற புதிய மாடல் விளக்குகள் உருவாக்கி வருகிறது பகலில் மறைந்து இரவில் ஒளி தரும் அபூர்வ விளக்குகள் நீலகிரி உதகை பஞ்சாயத்து யூனியன் சாலை நுழைவு வழி அருகில்காணப்படுகின்றன, இதனை நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்?

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0