நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவர் வினோத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சங்கத்தின் நிறுவனர் சேவாரத்னா டாக்டர் S.முத்துராமலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி
அறிமுக ஆலோசனைக் கூட்டம் உதகை அப்பர் பஜார் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது, சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் கூட்டத்திற்கு திரளான நிர்வாகிகள் கூடலூர், உதகை, கோத்தகிரி பகுதிகளில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர், கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை நீலகிரி மாவட்டத் தலைவர் வினோத், மற்றும் மாநில சுற்றுச்சூழல் துறை செயலாளர் சாலமன் சார்லஸ் ஆகியோர் அனைவரையும் வரவேற்று வரவேற்பு ரையாற்றினர், நிகழ்ச்சி தொடர்ச்சியாக நிர்வாகி கள் அனைவரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் இனிவரும் காலங்களில் சங்கத்தின் நகர்வை குறித்தும், ஆலோசனை தீர்மானிக்கப்பட்டது, இதில் நிர்வாகிகள் தங்களது மேலான கருத்தினை பதிவு செய்தனர். நிகழ்ச்சி தொடர்ச்சி யாக நீலகிரி மாவட்ட தலைவர் BR. வினோத் சேவாரத்னா விருது பெற்றமைக்கு சுற்றுச் சூழல் துறை செயலாளர் சாலமன் சார்லஸ் பொன்னாடை போர்த்தி அவரை கௌர வித்தார், சுற்றுச்சூழல் துறை துணை செயலாளர் சாணவாஸ் அவர்களுக்கு அன்பின் பரிசலிப்பு வழங்கினார். விழா நிகழ்ச்சியின் சிறப்பாக உதகை கெந்தோரைப் பகுதியில் அமைந்துள்ள சுபா சுபம் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு ஒரு சிறு தொகையானது சங்கத்தின் சார்பாக நன்கொடை அவர்களுக்கு வழங்கப்பட்டது. நடைபெற்ற கூட்டத்திற்கு சங்க நிர்வாகிகளான ஜஸ்டின், சதீஷ், ஜான், ரபேல், ரஞ்சித், வின்செல், சரவணன், காஜா, இப்ராஹிம், கபீர், லட்சுமணன், பிரபு,ரமேஷ் (கோத்தகிரி) வசந்தா, தனலட்சுமி (கூடலூர் பகுதி நிர்வாகிகள் கௌரி, ராஜேஸ்வரி, சபிதா, உஷா,) பிரியா (கோத்தகிரி)(உதகை புவனேஸ்வரி சுமையா ராபியா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக முதியோர் இல்லத்தின் நிர்வாகி பிலிப், மற்றும் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்டத் தலைவர் வினோத் நன்றி தெரிவித்துக் கொண்டார், நிகழ்ச்சி இறுதியாக நன்றி உரை ரமேஷ் சாந்தூர் நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க அறிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், தொடர்ந்து விழா நிறைவாக அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.