நீலகிரி மாவட்ட திமுக செயலாளர், சி.பி.எம் செயலாளர் சந்திப்பு-தொகுதி மக்களின் அத்தியவாசிய நல பணிகள் குறித்து ஆலோசனை

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை சி.பி.எம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் சங்கரலிங்கம், வினோத் ஆகியோர் சந்தித்து, கூடலூர் தொகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய மக்கள் நல பணிகள் நடைபெற துறை சார்ந்த நடவடிக் கைகள் எடுக்க கேட்டுக்கொண்டதோடு, நடைபெறும் சி.பி.எம்., மாநாடு குறித்து பேசியபோது. உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, பில்லன், சதக்கத்துல்லா, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.