நீலகிரி விடியல் என் ஜி ஓ. தன்னார்வ அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கம்பளி போர்வை வழங்கப்பட்டன

உதகை: உதகை கார்டன் சாலையில் அமைந்துள்ள ஆசியா மாற்றுத திறனாளிகுழந்தைகளுக்கான பள்ளியில் பயிலும் குழந்தைகள் இங்கு தங்கி கல்வி கற்று வருகின்றன, தற்போது நீலகிரி மாவட்ட முதலில் பெய்து வரும் கனமழை கடும் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை அறிந்த விடியல் என் ஜி ஓ தன்னார்வ அமைப்பினர் முன்வந்து இங்கு இருக்கும் மாணவ மாணவி களுக்கு நீலகிரி விடியல் NGO தன்னார்வ அமைப்பின் சார்பில் குளிர்காலத்திற்கு ஏற்றவாறு உல்லன் ஆடைகள் தொப்பி மற்றும் கம்பளி போர்வை ஆகியன வழங்கப்பட்டன. இதில் அமைப்பின் நிறுவன தலைவர் லாரன்ஸ், நிர்வாகிகள் பொதுசெயலாளர் உமாசங்கர், செயலாளர் நஸீர் அமைப்பாளர் ஜெயராமன், பொருளாளர் ஷானவாஸ், மகேஷ், யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை நிறுவனர் சரவணன், இயற்கை காதலன் நவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் சிறப்பித்தனர், மாற்றுத்திறனாளிகளின் நிர்வாகம் மற்றும் குழந்தைகள் நன்றி தெரிவித்தனர்,.