கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 20 22 ஆம் ஆண்டு டோர் மாதம் 23ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் கார் ஓட்டி வந்த ஜமேஷா முபின் ( வயது 28) அதே இடத்தில் உயிரிழந்தார் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்த போது காரில் இருந்த சில தடயங்கள் சிக்கின. தொடர்ந்து ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த வழக்கை முதலில் உக்கடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு என். ஐ. ஏ. விடம் ஒப்படைக்கப் பட்டது. இதே தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜமே ஷா மூபினின் கூட்டாளிகள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே கடந்த மாதம் இந்த வழக்கில் போத்தனூரைச் சேர்ந்த அபுஹனீபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன் ,உக்கடம் ஜி .எம் .நகரை சேர்ந்த பவாஸ் ரகுமான் ஆகிய 3 பேரை என். ஐ. ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இது தொடர் பான வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி உள்ள என் .ஐ. ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து அடிக்கடி கோவைக்கு அழைத்து வந்து என். ஐ. ஏ .அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் கைதாகி புழல் சிறையில் இருந்த அபு ஹனீபா, சரண் மாரியப்பன்,பவாஸ் ரகுமான் ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது .அரபு பாடசாலை ஆசிரியரான அபு ஹனிபா கார் வெடிப்பில் பலியான ஜமே ஷா முபின், அவரது கூட்டாளிகளுக்கு வகுப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. சரண் மாரியப்பன், பவாஸ் ரகுமான் ஆகியோர் குண்டு வைப்பது தொடர்பாக சதி திட்டம் தீட்டிய போது பணம் கைமாறி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0