நியூடவுன் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் வாணியம்பாடி தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நியூடவுன் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க வேண்டி மத்திய மாநில அரசுகளின் கவன ஈர்ப்பு மற்றும் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணியளவில் வணிகர் சங்கரின் பேரவை தலைவர்  கே‌.பி.எஸ் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. உடன் வணிகர் சங்கரின் பேரவை அமைப்பு மாவட்ட பொருளாளர் செந்தில் ஆறுமுகம் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அமைப்புகள், தன்னார்வு அமைப்புகள், ரெடிமேட் ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஓவியர்கள் சங்கம், இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம், முத்தமிழ் மன்றம், திருக்குறள் மன்றம், வாணியம்பாடி வேர்கள் அறக்கட்டளை, ஏபிஜே அப்துல் கலாம் பசுமை புரட்சி அறக்கட்டளை, காங்கிரஸ் கட்சியினர், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விடுதலை சிறுத்தை கட்சிகள், நாம் தமிழர் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.