கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானிய நிதியின் கீழ் 2 கோடி 22 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் பணி, மற்றும் வார்டு எண் 6, நாகம்மாள் நகர்,வார்டு 7 , வற்றியம்மன் நகர், வார்டு எண் 8, அமர்ஜோதி விமான நகர் ,ஜி கே எஸ் நகர், வார்டு எண் 9, எஸ் வி கே நகர், வார்டு எண் 13 ,குப்ப தேவர் வீதி, வார்டு எண்16 ஏ கே ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டதின் கீழ்168.96 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையில் வலுப்படுத்துதல் பணிகள், அயோத்தி யதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வார்டு எண் 7, மதியழகன் நகர் மெயின் ரோடு, கோழி பண்ணை காடு பகுதியில் மழை நீர் வடிகால் பராமரிப்பு செய்தல் 46:30 லட்சம் மதிப்பீட்டில் புரஅமைப்பு செய்தல், பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டம் வார்டு எண் 6ல், 10 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றை கோயமுத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த. மன்னவன் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், சூலூர் நகர செயலாளர் கௌதமன், வலியின் தலைமை ஆசிரியர் ஜெயசீலி, முன்னாள் மாணவர் அறக்கட்டளை பொருளாளர் அரிமா நடராஜன், உறுப்பினர் பசுமை நிழல் விஜயகுமார், மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வீராசாமி, வேலுச்சாமி, தங்கமணி, விஜயலட்சுமி, லலிதா, திமுக நகர துணை செயலாளர் கற்பகம், வார்டு கழக செயலாளர்கள், காங்கிரஸ் நகர தலைவர் கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0