நீலகிரி மாவட்டம் தொடர் பழங்குடியினர் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனமாடி மிகுந்த உற்சாகத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தோடர் பழங்குடியினர் மாற்றுக் கட்சிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்டோரை தமிழக வெற்றிக்கழக நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்றனர், விழா தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் உதகையில் உள்ள Y B A தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் கணேஷ் தலைமையில், மாவட்ட ஆலோசகர் ஊட்டி டேனி, நகர செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் உதகை, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றி கழக நீலகிரி மாவட்ட தலைவர் ரமேஷ், நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர், நீலகிரி மாவட்ட தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனமாடி மிகுந்த உற்சாகத்துடன் உதகை நகர செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டனர்,நிகழ்ச்சி தொடர்ச்சியாக இக்கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட ஆலோசகர் ஊட்டி டேனி கூறுகையில், தவெகாவின் மாநில தலைவர் விஜயின் வழிகாட்டு தலின்படி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றனர், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவினர் சிறப்பாக செயல்பட்டு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களை வெற்றியடைய செய்து தமிழக முதல்வராக வேண்டுமென நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் அறிவுறுத் தப்பட்டது, இக்கூட்டத்தில் மாவட்ட பழங்குடியின அணி தலைவர் தினேஷ், செயலாளர் நாசில் குட்டன்,நகர நிர்வாகிகள் ஸ்டான்லி, குணா, மல்லிக்கான், சபிக்,ஆறுமுகம், மற்றும் நகரம், மாவட்டம், ஊராட்சி, பேரூராட்சி, மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுக் கட்சியினர்கள் கழக உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து தந்து புதிய உறுப்பினரின் சேர்க்கை காண பணிகளை இணைய தளம் மூலமாக அவர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுஉறுதி செய்யப்பட்டது, நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்நிறைவாக கழகத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0