நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை தைவான் நாட்டில் இருந்து இந்தியா கொண்டுவர அனைத்து இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நேதாஜியின் மகள் பேராசிரியர் அனிதா போஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் நேதாஜி 126-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஜெர்மனியில் உள்ள அவரின் மகள் அனிதா போஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தைவானில் உள்ள நேதாஜியின் ஹஸ்தியை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சுதந்திர இந்தியாவிற்கான நேதாஜி துரதிஷ்டவசமாக உயிரோடு இல்லாவிட்டாலும் அவரின் இறுதி ஹஸ்தி தாய் மண்ணில் இருக்க அனுமதிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். தமது இந்த கோரிக்கைக்கு அனைத்து இந்திய மக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனிதா போஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.