கோவை டாடாபாத் அழகப்ப செட்டியார் வீதியைசேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 29)வியாபாரி.இவரது வீட்டில் ரத்தினபுரி பெரியசாமி லேஅவுட்டை சேர்ந்த பிளம்பர் முத்துகிருஷ்ணன் ( வயது 39)என்பவர் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.வேலை முடிந்து அவரை வீட்டில் கொண்டு விடுவதற்காக விக்னேஷ் தனது பைக்கில் ஏற்றிச் சென்றார் ..முன்னதாக இருவரும் அந்தப் பகுதியில் உள்ளடாஸ்மாக் கடையில் மது அருந்தினர்.பிறகுமுத்துகிருஷ்ணனை பைக்கில் பின்னால் வைத்து கூட்டி செல்லும்போது திடீரென்று விக்னேஷ் கழுத்தில் கிடந்த 2பவுன் செயினை பறித்துக்கொண்டு முத்துக்கிருஷ்ணன் தப்பி ஓடி விட்டார் .இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து கிருஷ்ணனை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0