நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சென்னை மகாபலிவுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு சினிமா நட்சத்திரக்ள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒருவாரம் கழிந்த நிலையிலும் இவர்களது திருமணம் சமூக வலைத்தளங்களில் இன்னும் பேசு பொருளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது.
திருமணம் முடிந்த கையோடு, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி திருப்பதி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம், மாமியார் வீட்டில் விருந்து மற்றும் கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் ஆசிர்வாதம் என பரபரப்பாகவே இருக்கின்றனர்.
இந்நிலையில், நயன்தாரா திருமணம் நடபெற்றபோது, மகாபலிபுரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்ககூடாது என்றும் பொதுமக்கள் கடற்கரைக்கே செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.
அப்படி பாதுகாப்பாக முடிந்த திருமணம் தற்போது வழக்குப்பதிவில் வந்து நின்றுள்ளது. திருமணத்தின்போது, கடற்கரை பொது இடம் என்பதால் அங்கு ஏன் பொதுமக்களை அனுமதிக்கவில்லை எனக்கூறி சமூக ஆர்வலரான சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.