திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நம்பர் 3 மலர் சாலை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு அவர்களின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை பல வைத்தனர் அதில் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட கூடாது என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக மாதாமாதம் தண்ணீர் திறக்க கோரியும், பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்ய கோரியும் போன்ற கோரிக்கைகளுக்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.திருச்சி செய்தியாளர் H. பஷீர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0