பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு பயிற்சி

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு பயிற்சி தேர்வுக்கான கலந்தாய்வு கருத்தரங்கம் பாவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நேர்முக உதவியாளர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வித்திறன் பற்றியும் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர். கருத்தரங்கு பயிற்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் செந்தில் குமார் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாவை அறக்கட்டளையின் சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்னஸ் பிடோலின் செய்திருந்தார்.