நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம், உதகை இரயில் நிலைய முகப்பிலிருந்து, நெடுஞ்சாலைத்துறையின்
சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு (31.01.2025) நடைபெற்ற
விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்தான துண்டு பிரசுரங்களை ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு மாதம் 01.01.2025 முதல் 31.01.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது,அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக உதகை இரயில் நிலைய முகப்பில் துவங்கிய பேரணியானது, எட்டின்ஸ் சாலை வழியாக ஏடிசி பகுதியில் நிறைவடைந்தது, இப்பேரணியில், யூனிக் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த
200 மாணவ, மாணவியர்கள், ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த 100 ஓட்டுநர்கள்,
சாலைப்பணியாளர்கள், 50 நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் என மொத்தம்
450க்கும் மேற்பட்டோர், “தூங்கும் கண்கள் துயரின் கணங்கள் – ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு பிற உயிர் காப்பீர் – அதிவேகமே விபத்துக்கு காரணம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள், இப்பேரணியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவிப் பொறியாளர்கள் பிரகாஷ் (உதகை), பாலச்சந்தர் (குன்னூர்), சாலை ஆய்வாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், படுகா குணவே கோப் சங்க தலைவர் தாம்பட்டி சிவக்குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் உட்பட பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்,.