போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி…

குடியரசு தின விழாவையொட்டிகோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் 100 அடி உயரத்தில் 1200 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பம் அமைக்கப்பட்டது.இதில் 30 அடி நீளம் 20 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி இன்று ஏற்றி வைக்கப்பட்டது.இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று ஏற்றி வைத்தார்.இந்த தேசியக்கொடி 24 மணி நேரமும் பறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தேசியக்கொடி இரவிலும் தெரியும் வகையில் பிரகாசமான வழக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.மும்பையை சேர்ந்த நிறுவனம் இந்த கொடி கம்பத்தை அமைத்தது. இந்த நிகழ்ச்சியில் ” பஸ்ட் ஹார்ட்பவுண்டேசன் ” சார்பில்இருசக்கர, 4 சக்கர வாகனங்களில்சென்று உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் ரோந்து திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் சரவணகுமார், சுஹாசினி, ராஜராஜன்ஊர்க்காவல் படை தலைமை அதிகாரிதனசேகரன் மற்றும் உதவி கமிஷனர்கள் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இனிப்பு வழங்கினார்.