போதை மருந்து – கஞ்சா கடத்தல். 4 பேர் கைது.

கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் ,சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்குசந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2.5 கிராம் உயர் ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கரும்புக்கடை ,கஸ்தூரி நகரை சேர்ந்த காஜா உசேன் ( வயது 24) செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 29)என்பது தெரியவந்தது. இவர்களில்காஜா உசேன் மீது மீது ஏற்கனவே கொலை வழக்கு ,திருட்டு வழக்குகள் உள்ளன.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதேபோல கோவைமதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு மறைவான இடத்தில் சந்தேகபடும்டி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிராம் உயர்ரக போதை பொருள் ,50 கிராம் கஞ்சா 3 செல்போன் டிஜிட்டல், வெயிட்டிங் எந்திரம்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டது ..இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தொண்டாமுத்தூர் ஓனாப்பாளையத்தைச் சேர்ந்த ரூசல் பிரான்சிஸ் (வயது 32) பஞ்சாப்பை சேர்ந்த ஜிலேந்தர் சிங் பங்கு ( வயது 35 )என்பது தெரியவந்தது. இவர்களில்பாலக்காட்டைச் சேர்ந்த அருண் ( வயது 28) என்பவர் தப்பி ஓடிவிட்டார்.