கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் ஆடியோ அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டு கேட்பதாகவும், அவற்றை பொதுவெளியில் வெளியிடுவதாகவும் நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒழுங்கினைப்பாளரான சீமான் கட்சியின் முன்னணி நிர்வாகி களான காளியம்மாள் கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் குறித்து பேசிய ஆடியோ வெளியானது. சீமானா இப்படி பேசுகிறார் என விமர்சனங்களும் எழுந்தது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கைது செய்த போது அவரது மொபைலில் இருந்த ஆடியோ வீடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினர் எடுத்து வைத்துக்கொண்டு லீக் செய்ததாகவும் கூறப்பட்டது. மற்றொருபுறம் அது சீமான் பேசியது அல்ல என சிலர் கூறினாலும் இந்த விவகாரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றொருபுறம் அது சீமான் பேசியது அல்ல என சிலர் கூறினாலும் இந்த விவகாரம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே அதிமுகவுக்கு சென்ற கல்யாணசுந்தரத்திடம் காளியம்மாளும், திமுகவுக்குச் சென்ற ராஜீவ் காந்தியிடம் நத்தம் சிவசங்கரும் பேசி வருவதாகவும், இருவரும் விரைவில் அவர்கள் அந்த கட்சிகளில் இணைவார்கள் என கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க கட்சியில் சீமான் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் முக்கிய நிர்வாகிகளை சீமான் மதிக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே நிர்வாகிகள் தொண்டர் என பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி இருக்கின்றனர். இது மட்டும் அல்லாமல் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மண்டல செயலாளர்கள் மாவட்ட செயலா ளர்கள் தொகுதி செயலாளர்கள் என கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் சீமான் நீக்கிதாக கூறப் படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களில் இருந்து பல நிர்வாகிகள் தூக்கி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் திருச்சி மண்டல செயலாளர் பிரபு, தெற்கு மாவட்ட செயலாளர் முருகன், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சீமான் மீது பலத்த குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய பிரபு சீமான் சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். அவரது பேச்சும் செயலும் வேறு வேறாக இருக்கிறது. தமிழ் தேசிய உணவாளர்களின் உழைப்பை சுரண்டி சீமான் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். திரள்நிதி மூலம் கட்சி தலைமை அலுவல கத்திற்கு கொடுத்த பணத்தை சீமான் வட்டிக்கு விட்டார். அந்த பணத்தை வாங்கியவர் அதனை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்து தலைமறைவாகிவிட்டார்.கட்சிக்கு செயற்குழு பொதுக்குழு தனி சட்டம் என எதுவும் கிடையாது. ஒன் மேன் ஆர்மியாக செயல்படுகிறார் . கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் பிரபலமாக கூடாது என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு நேரம் வருவாய் என எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக கொடு த்தோம். அதற்கு உரிய மதிப்பில்லை. எதற்கெடுத்தாலும் என் கட்சி, என் கட்சி என சீமான் பேசுகிறார். சீமான் மட்டுமே நாம் தமிழர் கட்சியை வளர்த்தாரா ஒவ்வொரு மாவட்டத் திலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் எங்கே போவது தமிழ்தேசியம் தலைவர் பிரபாகரனை நேசித்து இந்த கட்சிக்கு வந்தோம். தற்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகம் சரியில்லை. கட்சி அலுவலகம் ஆயிரக்கணக்கான நபர்களின் உழைப்பில் வந்தது. அதை தனி நபரின் பெயரில் பத்திரம் செய்துள்ளனர் என்றார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0