கோவை புதூர், அறிவொளி நகர், அண்ணா சதுக்கத்தை சேர்ந்தவர் பாலு (வயது 36) வங்கியில் கடன் வாங்கிக் கொடுக்கும் புரோக்கராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 26) இவர் நேற்று தனது தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் பாலு குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது மனைவி மற்றொருவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0