கோவை; தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி சார்பில் அதன் தலைவர் எஸ். எம். பி. முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனிஸ்,செயலாளர் சூலூர் குணசிங், ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா ஆகியோர் கோவை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் ஒருமனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 6 மாதங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டநிலையில் தினசரி சுங்கம் வாரசந்தைக்கும்,ஏலம் விடப்பட்டது. இதைசரவணன் என்பவர் வருடத்திற்கு ரூ 2 லட்சத்து ஆயிரத்துக்கு ஏலம்எடுத்துள்ளார். இவர்அராஜகமாக வரைமுறை இல்லாமல் வியாபாரிகளை மிரட்டி சுங்கம் வசூல் செய்தும், அரசு நிர்ணயம் செய்த சுங்க வரியை விட இரட்டிப்பாக சுங்கம் வசூல் செய்து வருகிறார். இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில்பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் கமலம் ரவி ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக புகார் தெரிவித்த சம்மேளன நிர்வாகிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர்பழனியப்பன், குத்தகைதாரர் சரவணன் ஆகியோர்மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மேற்படி செயல் அலுவலர் மீதும், சட்டத்துக்கு புறம்பாக வியாபாரிகளிடம் சுங்கம் வசூல் செய்யும் ஒப்பந்ததாரர் சரவணன் மீதும் உரிய நடவடிக்கை எடுத்தும், நியாயமான முறையில் வியாபாரிகளிடம்சுங்கம் வரி வசூல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0