மக்களோடு மக்களாக என்றும் துணையிருப்பேன் ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.ஈஸ்வரசாமி உறுதி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அனைத்துக்கட்சி மற்றும் அனைத்து அமைப் பினரும் ஒருங்கிணைந்த அவசர ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தலைமையில் வால்பாறை கிரீன் ஹில்ஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவால் வால்பாறை பகுதியில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு அதை ரத்து செய்வதற்க்கான நடவடிகைகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனைக்கு இணங்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டப்பேரவை மூலம் உரிய அழுத்தம் அளிக்க அதற்க்கான பணியை செய்வதா கவும் அதோடு வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா பற்றியும் அதனால் வால்பாறை பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்து உரிய தீர்வுகாண பாடுபடுவேன் என்றும் வால்பாறை பகுதி மக்களின் நலன் கருதி என்றும் மக்களோடு மக்களாக இணைந்து செயல்படுவேன் என்றும் எம்.பி.ஈஸ்வரசாமி உறுதி யளித்தார் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நகர் மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர், வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள்,அனைத்து கட்சி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள்,சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட நிலையில் அனைத்து தரப்பினரையும் ஒருங் கிணைத்து ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்த நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது