திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கால்நடைகள் போக்குவரத்து சாலைகளை ஆக்கிரமித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
செங்கம் – போளூர் மற்றும் திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செங்கம் பகுதியில் முக்கிய சாலையாக உள்ளது . இந்த சாலைகளில் காலை மாலை என இரு வேலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது.
இந்த சாலைகளில் குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து கால்நடைகள் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து சாலையின் குறுக்கே படுத்து கொள்வதால் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற மிகுந்த அச்சத்தில் கடந்து செல்கின்றனர்.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து திருவண்ணாமலையில் உள்ள கோ சாலையில் விட நடவடிக்கை எடுக்குமாறு செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..