தாய் – மகனுக்கு கத்தி குத்து .டெய்லர் கைது.

கோவை செல்வபுரம் பக்கம் உள்ள சொக்கம்புதூர் அய்யாவு பண்ணாடி வீதியை சேர்ந்தவர்செல்வி ( வயது 38) இவரது மகன் விக்னேஷ் ( வயது 18) நேற்று இவர்களது வீட்டு முன்கோலம் போட்டுக் கொண்டிருந்த போது, குப்பை கொட்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இவர்கள் இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் தண்டபாணி ( வயது 58 )என்பவர் கத்தியால் குத்தினாராம். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து செல்வி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைநடத்தினார் இது தொடர்பாக தண்டபாணி நேற்று இரவு கைது செய்யப்பட்டார் இவர் மீது கொலை முயற்சி,பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..