மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் தூக்கு போட்டு தற்கொலை

கோவை பேரூர் அருகே உள்ள ராமச் செட்டிப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் பாபு ..இவரது மனைவி ஜீவா (வயது 34)இவர்களது மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்துஅவரது கணவர் பாபு பேரூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.