தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு – ஒருவர் கைது..!

கோவை துடியலூர் கணுவாய் பக்கம் உள்ள கே .என். ஜி. புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சுமதி ( வயது 50) மகன் அடைக்கலராஜ் ( வயது 33)நேற்று இவர்கள் வீட்டில் இருந்தபோது முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் இவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தினார்கள். பின்னர் சுமதி அடைக்கலராஜ் ஆகியோ ரை அறிவாளால் வெட்டினார்கள். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து துடியலூர் போலீசில் சுமதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்துமலையாண்டி பட்டினம் செஞ்சேரி மலையை சேர்ந்த திருமலைசாமி மகன் பிரபாகரன் (வயது 19) என்பவரை கைது செய்தார். கவுதம், சந்துரு |சந்தோஷ் லோகேஷ் மற்றும் 2 பேரை தேடி வருகிறார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.