கோவை, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் ( வயது 42 )இவர் ஈரோட்டில் தங்கி யிருந்து ” டைல்ஸ்” ஒட்டும் தொழில் செய்து வருகிறார்..இவர் நேற்றுவேலை செய்வதற்காக கோவைக்கு வந்திருந்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ்சை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரது பையை கொள்ளையடித்து சென்று விட்டனர். அதில் ரூ 38 ஆயிரம் பணம் இருந்தது. இதுகுறித்து மனோஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் பட்டப்பகலில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள அண்ணா சிலை அருகேபட்டப் பகலில் நடந்தஇந்தக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0